நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு

தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தாவை உடனடியாக கைதுசெய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவின் வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரினார்.

இவ்வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்ததால் நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, உயர்நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. 

இந்நிலையில் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நித்தியானந்தாவின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை ராம்நகர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

அத்துடன் நித்தியானந்தாவை உடனே கைது செய்ய ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்தியானந்தா எங்கே பதுங்கி இருக்கிறார்? என்பது குறித்து தகவல் தெரிவிக்க ஏற்கனவே இண்டர்போல் போலீசார், ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே