வாரிசு என என்னை நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும் – உதயநிதி ஸ்டாலின்

வாரிசு என என்னை நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக தலைவரான ஸ்டாலினின் மகன் என்பதால் அவருக்கு எளிதில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து விட்டது என்று அவர் மீது ‘வாரிசு அரசியல்’ குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்நிலையில் வாரிசு என என்னை நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று பிரசாரத்தில் பேசிய அவர், ‘ வாரிசு என என்னை நினைத்தால் மக்கள் தேர்தலில் நிராகரிக்கட்டும்; எம்.எல்.ஏ பதவி என்பது நியமனப் பதவி கிடையாது. மக்களால் தேர்தெடுக்கப்படும் பதவி’ என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே