உயிரிழந்த மருத்துவரின் சடலத்தை தகனம் செய்ய எதிர்ப்பு…!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உயிரிழந்ததால் அவரது உடலை கவச உடையணிந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள் அம்பத்தூர் மின்மயானத்தில் வைத்துவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் லட்சுமி நாரயணன் ரெட்டி.

இவர் காய்ச்சல் காரணமாக வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் அம்பத்தூர் அயப்பாக்கம் சாலையில் உள்ள மின் லட்சுமணன் மயானத்தில் மருத்துவமனை ஊழியர்கள் கவச உடையை அணிந்து கொண்டு வந்து உடலை மின் மயானத்தில் உள்ளே வைத்து விட்டு சென்று விட்டனர்.

இதையடுத்து கொரோனா அச்சம் காரணமாக மின்மயானத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது, மேலும், அங்கிருந்தவர்கள் இந்த உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மின்மயான ஊழியர்கள் அம்பத்தூர் காவல் நிலையம் வந்து அளித்த தகவலின்பேரில் மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறையினர் மருத்துவர் சாதாரண காய்ச்சலுக்கு உயிரிழந்தாரா அல்லது கொரோணா பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா என குழப்பத்தில் காவல்துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை அளித்துள்ள விளக்கத்தில், கொரோனா தொற்று உறுதியான நெல்லூரை சேர்ந்த மருத்துவரின் உடல் மருத்துவமனையால் கொண்டு வரப்பட்டது. வீசிச் செல்லவில்லை.

அப்பல்லோ ஊழியர்கள் இன்னும் மயானத்தில் இருக்கிறார்கள். உடலை தகனம் செய்வதற்கு மயான ஊழியர்கள் முன்வரவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே