கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மூடப்பட்டன. அதே போல தியேட்டர்களும் செயல்பட கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை, வெள்ளித்திரை பட பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இதனிடையே ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதால் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இடங்களில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல திரைப்படங்கள் வெளியாவது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்கள் பலர், தியேட்டர்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக திரையரங்குகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின்றன.