போதைப்பொருளை கடத்தியதாக பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அக்கட்சினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் போதை பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சியிலிருந்து மதுரைக்கு அபின் கடத்தப்படுவதாகக் குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மன்னார் புரம் பகுதியில் நேற்றிரவு வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர்.

அப்போது, காரில் அபின் போதைப்பொருள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காரில் வந்த இரண்டு பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, திருச்சியைச் சேர்ந்த சரவணன், ஜெயப்பிரகாஷ் என்பது தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூரைச் சேர்ந்த சித்தா மருத்துவர் மோகன்பாபு, பா.ஜ.க பிரமுகர் மெக்கானிக் அடைக்கலம் உள்பட நான்கு பேரையும் நேற்றிரவு கைது செய்த காவல்துறையினர் திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த போதைப் பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் 15 லட்சம் ரூபாய் என்றும் இது ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள அடைக்கலம், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏ.சி மெக்கானிக்காக இருந்ததோடு, முன்னாள் பெரம்பலூர் பாஜக மாவட்ட துணைத் தலைவராக இருந்துள்ளார்.
தற்போது ஓ.பி.சி.பி அணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.
Pingback: பாஜக அறிக்கையில் 2 கிலோ அபின் என்று குறிப்பிடப்பட்டதா? | FactCrescendo | The leading fact-checking website in India