அபின் கடத்தல் : பாஜகவில் இருந்து சர்ச்சைக்குரிய நிர்வாகி நீக்கம்!!

ஓபிசி அணியின் தமிழ்நாடு பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்த லுவாங்கோ பி. அடைக்கலராஜ் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு பாஜக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளரும், மாநில தலைமை அலுவலக பொறுப்பாளருமான கரு. நாகராஜன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ”பெரம்பலூர் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினரான லுவாங்கோ பி. அடைக்கலராஜ் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்.

அவருடன் கட்சியின் நிர்வாகிகள மற்றும் உறுப்பினர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

திருச்சி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலிஸாருக்கு திருச்சி பகுதியில் காரில் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் காமராஜ் தலைமையிலான போலீஸாசார் நடத்திய வாகன சோதனையில் அந்த கார் தடுத்து நிறுத்தப்பட்டது.

காரை சோதனையிட்டதில், காரில் அபின் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் பெரம்பலூரை சேர்ந்த அடைக்கலராஜ், உடன் வந்தது திருச்சி நொச்சியம் மாந்திரி மங்களத்தை சேர்ந்த ஆதடையான் என்பது தெரிய வந்தது.

விசாரணையில் பெரம்பலூர் பாஜக மாவட்ட துணைத்தலைவர் மற்றும் ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினராக லுவாங்கோ பி. அடைக்கலராஜ் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

அவரது காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து தற்போது பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே