திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்தார்களே தவிர திமுகவை அழிக்க முடியாது – மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார் முதல்வர் பழனிசாமி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

அதே நேரத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 4ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில்; திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்; தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார் முதல்வர் பழனிசாமி. கலைஞர் இல்லாததால் திமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சியான திமுகவை வீழ்த்த அத்தனை பேரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். திமுகவை வீழ்த்த எத்தனை துரோக சக்திகள் வந்தாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. 234 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்; அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது, அவர்கள் பாஜக எம்எல்ஏவாக செயல்படுவார்கள். அதிமுக – பாஜக கூட்டணியை வாஷ் அவுட் செய்ய வேண்டும். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை பற்றி மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் சிறிதும் கவலைப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்ததும் 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்திய நதிகளை இணைக்க மத்திய அரசை வலிறுத்துவோம்; தென்னக நதிகளை இணைப்போம். ரூ.10,000 கோடியில் ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் புதிதாக இயற்றப்படும் எனவும் உறுதி அளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே