மக்கள் நீதி மய்யம் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 43 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார்.

மக்கள் நீதி மய்யம் அதிமுக, திமுக இல்லாமல் மூன்றாவது அணியாகத் தேர்தலில் நிற்கிறது.

மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.

அந்த இரண்டு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடும் எனவும், மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

70 தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில், இன்று (மார்ச் 12) இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதில், கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மநீம 43 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று கமல்ஹாசன் வெளியிட்டார்.

இதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் முதல்முறையாக தேர்தலில் களம் காண்கிறார்.

மேலும், தியாகராயநகர் தொகுதியில் கட்சியில் சமீபத்தில் இணைந்த பழ.கருப்பையா, மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீப்ரியா, சிங்காநல்லூர் தொகுதியில் அக்கட்சியின் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

முழு பட்டியல் விவரம்:

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே