ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு..!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பணம் வைத்து விளையாடுவோர் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் தடை செய்யப்படும் என்றும்; ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வது தடுக்கப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

ரம்மி விளையாட்டு நடத்தும் நிறுவன பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தண்டிக்கும் வழிவகை செய்யும்.தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் 5,000 அபராதம் ஆறு மாதம் சிறை தண்டனை என தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் அபராதம் 2 ஆண்டு சிறை தண்டனை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை அரசிதழில் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே