டிவி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்..

இந்த திடீர் தற்கொலையால் ரசிகர்கள் உட்பட திரையுலகமே அதிர்ச்சியில் உள்ள நிலையில், சித்ரா மரணத்துக்கு நியாயம் கேட்டு, இணையத்தில் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.

28 வயதில் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தது ஏன் என்ற கேள்விதான் ரகிகர்கள் மனதில் எழுந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன் தான் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது..

மாப்பிள்ளை பெயர் ஹேமந்த் ரவி, அவர் பிசினஸ் செய்கிறார் என்று, எங்க வீட்டுலதான் மாப்பிள்ளை பார்த்தாங்க என்று டிவி ஷோவில் மாப்பிள்ளையை கையோடு அழைத்து வந்து அறிமுகம் செய்தவர் சித்ரா.

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் சித்ரா பங்கேற்றபோது, அவருக்கு சர்ப்ரைஸ் தருவதற்காக ஹேமந்தை வரவைத்து, அவரை ப்ரொபோஸ் செய்ய வைத்து, கையில் மோதிரம் மாட்டிவிடும் தருணமும் நடந்தபோது ரசிகர்கள் பூரித்து போய்விட்டனர்.

விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில்தான் தற்போது தற்கொலை என்ற பகீர் செய்தி வெளியாகி உள்ளது..

உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.. ஆனால், சித்ராவின் மரணம் பலவித மர்ம முடிச்சுக்களுடன் உள்ளது.

நேற்றிரவு சென்னை நசரத்பேட்டையில் உள்ள பிரைவேட் ஹோட்டல் ரூமில் ஹேம்நாத்துடன்தான் தங்கி இருந்துள்ளார்..

இங்கு தங்கியிருந்துதான் ஷூட்டிங்கிற்கு சென்று வந்துள்ளார்.. அந்த அறையில்தான் தூக்கும் போட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று நள்ளிரவும் ஷூட்டிங் முடிந்து வந்துள்ளார்.. அப்போது அவர் நார்மலாகத்தான் இருந்ததாக சொல்கிறார்கள்..

பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்..

அந்த போஸ்டில் அவரது போட்டோ இருக்கிறது.. ரொம்ப சாதாரண போஸ்ட்தான் அது..

ஏற்கனவே மன உளைச்சல், பிரச்சனைகளில் இருந்திருந்தால், இப்படி ஒரு போஸ்ட்டை ராத்திரி நேரத்தில் போட்டிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

விடிகாலை 3 மணிக்கு தூக்கு போட்டுள்ளார்.. அதனால், இந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன ஆனது என்பதுதான் மர்மமாக உள்ளது..

போலீசாருக்கு தகவல் சொன்னதும், அவர்கள் விரைந்து வந்தபோது, சித்ரா சடலமாக தொங்கி கொண்டிருந்தாராம்..

சடலத்தை மீட்டபோது, சித்ரா கன்னத்தில் காயங்கள் இருந்ததாம்..

இது மேலும் சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.. காயங்கள் இருந்துருந்தால் ஷூட்டிங் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த காயம் அவரது கன்னத்தில் எப்படி வந்தது என்பது அடுத்த கேள்வியாக எழுந்துள்ளது.

விடிகாலை 2.30 மணிக்கு ஷூட்டிங் முடிந்து வந்துள்ளார்.. அப்போது, தான் குளிக்கப்போவதாகவும், நீங்க வெளியே நில்லுங்கள் என்றும் ஹேமந்திடம், சித்ரா சொன்னாராம்..

அதனால் ஹேம்நாத்தும் ரூமை விட்டு வெளியே வந்துள்ளார்… ஆனால் ரொம்ப நேரமாகியும் அவர் கதவை திறக்காததாலும், பதில் எதுவும் வராததலும்தான் ஹேமந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதனால், ஹேமந்த் மாற்று சாவி கொண்டு ரூமை திறந்து உள்ளே போய் உள்ளார்.. அப்போதுதான் சித்ரா தன்னுடைய புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது…

இதையடுத்துதான் போலீசுக்கு தகவல் செதால்லி உள்ளார்.. இப்போதைக்கு ஹேமந்த் உள்ளிட்ட அந்த ஹோட்டல் நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும் சித்ராவின், செல்போன் உரையாடல்கள், மெசேஜ்களையும் ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்..

தான் சார்ந்துள்ள துறை ரீதியாக மன அழுத்தமாக, வருங்கால கணவருடன் ஏதேனும் பிரச்னையா, அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட கோணங்களில் போலீசர விசாரித்து வருகின்றனர்.

சித்ராவை பொறுத்தவரை அதிகம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்.. ரொம்ப ஏழ்மையான குடும்பம்… பார்ட் டைம் வேலை பார்த்துதான் காலேஜ் பீஸ் கட்டி படித்தவர்.. சிரமத்துடன்தான் டிகிரியை முடித்தார்..

நிகழ்ச்சி தொகுப்பாளராக கேரியரை தொடங்கிய அவர் Discovery Channel தவிர மற்ற எல்லா சேனல்களிலும் வேலை பார்த்துவிட்டார் என்று அவரை கலாய்க்காதவர்களே இல்லை..

அந்த அளவுக்கு சின்சியர் நடிகை.. அளவுக்கு அதிகமாக கஷ்டப்பட்டு தான் அடுத்தடுத்த லெவலுக்கு வந்து கொண்டிருந்த நிலையில், இப்படி ஒரு முடிவு அதிர்ச்சியை தந்துள்ளது.

சித்ரா எப்போதுமே துணிச்சலானவர்.. யாராவது சோர்ந்துவிட்டால், அட்வைஸ் தந்து அவர்களுக்கு உற்சாகம் தருவாராம்..

அப்படி இருக்கும்போது இதுபோன்ற கோழை முடிவை அவர் எடுத்திருக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர் அவரது நண்பர்கள்..

#vjchithra என்ற ஹேஷ்டேக்கில் “நம்பவே முடியாத ஒன்று”, “வாய்ப்பே இல்லை”‘என்னாச்சு சித்ரா போன்ற அதிர்ச்சி கேள்விகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே