திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 53 கோடி ரூபாய் மதிப்பிலான 31 முடிவுற்ற திட்டங்களை திறந்துவைத்ததோடு, 19 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 11 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் ,கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட 16 துறைகளின் சார்பில் 18 ஆயிரத்து 279 பயனாளிகளுக்கு 134 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே