ஒன் பிளஸ் நோட்: அறிமுகமாகும் முன்பே இப்படியொரு ஆப்பா? என்ன கொடுமை சார் இது!

வழக்கமாக கடைசி நிமிடங்கள் வரை ரகசியம் காக்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் மாடலின் முழு அம்சங்களும் வெளியானது. இதை தெரிந்துகொள்ள ஜூலை 21 வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு சரியாக 10 நாட்களே உள்ளன. ஒன்பிளஸ் நோர்ட் AR நிகழ்வானது வருகிற ஜூலை 21 ஆம் தேதி மாலை 7.30க்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக நாள் நெருங்கிவிட்டதையடுத்து ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களை வெளிப்படுத்தும் புகைப்படம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. அதை பிரபல டிப்ஸ்டர் ஆன இவான் பிளாஸ் தனது ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக வெளியிட்டுள்ளார்.
இந்த லேட்டஸ்ட் லீக் புகைப்படத்தை பற்றி பேசும் முன்பே, படத்தில் உள்ள ஸ்மார்ட்போன் ஸ்கெட்ச் ஆனது ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் உண்மையான வடிவமைப்போடு ஒத்துப்போகவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ஆனால் இது சாதனத்தின் பொதுவான வெளிப்புறத்தை மட்டுமே காண்பிக்கிறது என்பதால் இதனை கருத்தில் கொள்வது அவ்வளவு முட்டாள்தனமானதாக இருக்காது. இருப்பினும், புகைப்படம் வெளிப்படுத்தும் அம்சங்கள் ஆனது பல்வேறு ஆதாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட அல்லது கசிந்த தகவல்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. இந்த இரு காரணமே இந்த படத்தில் உள்ள தகவல்களை நம்புவதை அதிகரிக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்:

படத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 5ஜி இணைப்பு ஆதரவு உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC இடம்பெறும்.

இந்த ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் அளவிலான ப்லுயிட் AMOLED டிஸ்பிளேவை 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் என்கிற வீதத்துடன், புல் எச்டி + தெளிவுத்திறனுடன் கொண்டிருக்கும். இதன் டிஸ்பிளே 408ppi ஆதரவு மற்றும் 20: 9 அளவிலான திரை விகிதத்தையும் வழங்கும்.

கேமராத்துறையை பொறுத்தவரை, ஒன்ப்ளஸ் நோர்டின் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பு இடம்பெறும். அதில் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார் (எஃப் / 1.75 மற்றும் ஓஐஎஸ் / இஐஎஸ் ஆதரவு) இடம்பெறும். உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் (119 டிகிரி எஃப்ஒவி) இரண்டாம் நிலை கேமராவாக இடம்பெறும். மீதமுள்ளவற்றில் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவைகள் இடம்பெறும்.
முன்பக்கத்தை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் டூயல் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே கட்அவுட்டுக்குள் இரட்டை செல்பீ கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. அது 32 மெகாபிக்சல் பிரதான கேமரா (எஃப் / 2.45) மற்றும் 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது.

மேலும் வெளியான பட்டியலின் படி, இந்த ஸ்மார்ட்போனில் பேஸ் அன்லாக் மற்றும் இன் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளது. இது ப்ளூ மார்பிள், கிரே ஓனிக்ஸ் மற்றும் கிரே ஆஷ் உள்ளிட்ட வண்ண விருப்பங்களில் அறிமுகமாகும்.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அல்லது 256 ஜிபி உள் சேமிப்பகத்தின் கீழ் மோதஜம் இரண்டு வெவ்வேறு மெமரி கட்டமைப்புகளில் கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் என்எப்சி, ப்ளூடூத் 5.1, வைஃபை 2 × 2 எம்ஐஎம்ஓ மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4115 எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களும் இடம்பெறும்.
இது ஆக்ஸிஜன் ஓஎஸ் 10 உடனான சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையின் கீழ் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 185 கிராம் எடையைக் கொண்டுருக்கலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே