போக்குவரத்துதுறையில் சமீப ஆண்டுகளாக ஓலா, உபேர் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

நடுத்தர குடும்பத்தினரின் முதல் தேர்வாக இத்தகைய நிறுவனங்கள் இருக்கின்றன.

ஓலா மற்றும் உபெர் போன்ற நிறுவனங்கள் அதிகபட்ச நேரங்களில் கட்டணங்களை பல மடங்கு அதிகரிக்கின்றன.

இதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளின்படி, தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் அடிப்படை கட்டணத்தை விட 1.5 மடங்கிற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்க கூடாது என சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது .

அதே போல், ஓலா உபேர் உள்ளிட்ட நிறுவங்களில் இணைந்து வாடகை கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தில் 80% வழங்க வேண்டும் என்றும்; அந்நிறுவங்கள் கட்டண தொகையில் 20% மட்டுமே பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஷேர் டாக்ஸி முறை இனி பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,ஷேர் டாக்ஸியில் பெண்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால், கட்டணத்திலிருந்து 10 சதவீதத்தை வசூலிக்க ஓட்டுநர்களுக்கு உரிமை உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் ஓலா உபேர் போன்ற நிறுவனங்கள் அடிப்படை கட்டணத்திலிருந்து ஒன்றரை மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிக்க முடியாது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

அதே நேரத்தில், ரத்து கட்டணம் மொத்த கட்டணத்தில் 10 சதவீதமாக இருக்கும், இது சவாரி மற்றும் ஓட்டுநர் இருவருக்கும் ரூ .100 ஐ தாண்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசுகள் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே