கொரோனா வைரஸ் : சீனாவில் தமிழக மருத்துவ மாணவர்கள் வேண்டுகோள்!

சீனநாட்டின் வுஹான் மாகாணத்தில் ஜியான்கான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் தமிழக மாணவர்கள் தங்களை சீக்கிரம் இந்தியாவிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரானா வைரஸ் பரவலின் மையப்புள்ளியாக வுஹான் மாகாணம் இருக்கிறது.

அங்கு பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு , பொது மக்கள் வுஹானை விட்டு உள்ளேயும் வெளியேவும் போகக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் சிக்கிக் கொண்டுள்ள மாணவர்கள் எங்களுக்கு முகமூடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உடனே நாடு திரும்ப விரும்புகிறோம் எனக் கூறுகின்றனர்.

தமிழர்களுக்கு இது வரை நோய் தொற்று ஏற்படவில்லை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று கூறினார்.

இந்தியத் தூதரகத்தை தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறோம். ஆனால் சரியான பதில் இல்லை.

நாங்கள் இங்கிருந்து வெளியேற ஒப்புக் கொள்கிறோம் என்ற படிவத்தை நிரப்பி இந்திய தூதரகத்துக்கு கொடுத்துள்ளோம். எப்போது அழைத்துச் செல்வார்கள் எனத் தெரியவில்லை.

தமிழக அரசு ஆதரவு தர வேண்டும். நகரமே முடங்கியிருப்பதால் ஏ.டி.எம்மில் காசு எடுக்க வழியில்லை. பல்கலைக்கழகத்தில் உணவு இல்லை.

நோய்த் தொற்று ஏற்படலாம் எனத் தெரிந்தும் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி சமைக்க வேண்டியுள்ளது.

என்னுடன் சேர்த்து நான்கு தமிழர்களும் பல இந்தியர்களும் இந்த பல்கலைக்கழகத்தில் சிக்கியுள்ளோம் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே