உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பெயர் பரிந்துரை..!!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி.ரமணாவை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார் தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக்காலம் ஏப்ரல் 23 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்க மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு கடிதம் அனுப்பினார்.

இதற்கு பதில் அளித்துள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி.ரமணாவை பரிந்துரை செய்துள்ளார்.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு அடுத்தபடியாக உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி.ரமணா. இவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26, 2022 வரை உள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என்.வி.ரமணா, கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

பின்னர் தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி அதைத் தொடர்ந்து 2014 பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே