தமிழகத்தில் என்பிஆர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகின்ற ஏப்ரல் 01-ம் தேதி தமிழகத்தில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் புதியதாக கொண்டுவந்த என்பிஆரில் புதியதாக மூன்று கேள்விகள் வந்து உள்ளது.
அந்த மூன்று கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்காத நிலையில் தமிழகத்தில் என்பிஆர் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.