வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்

வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லிப்ரா செல்போன் நிறுவனத்திற்கு இசையமைத்ததற்கு ரூ.3.47 கோடி ஊதியம் பெற்றதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் அவரது பெயரில் ஊதியத்தை வாங்காமல் ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்கு செலுத்தி வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது ,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே