புதிய இந்தியா, புதிய தேவை ஆகியவற்றை புதிய கல்விக் கொள்கை பூர்த்தி செய்யும் – பிரதமர் மோடி

புதிய இந்தியாவின் தேவைக்காக கல்வி கொள்கையை அமைத்திருக்கிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கல்விக்கொள்கை தொடர்பாக ’21ம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி கொள்கை’ என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

*கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஒவ்வொரு பிராந்தியமும் மாறினாலும் நமது கல்வி முறை மாறவில்லை

*30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை

*பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியமாக இருக்கிறது

*புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்பு புதிய தேவை ஆகியவற்றை புதிய கல்விக்கொள்கை பூர்த்தி செய்யும்

*புதிய இந்தியாவின் தேவைக்காக கல்வி கொள்கையை அமைத்திருக்கிறோம்.

*புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய யுகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.

*புதிய கல்விக்கொள்கைக்காக 5 ஆண்டுகள் உழைத்தும் பணி இன்னும் முடியவில்லை

*இக்கல்வி கொள்கைக்காக இரவு பகலாக உழைப்பு தரப்பட்டுள்ளது*மழலை கல்வியை கிராமங்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம்

*அனைவரும் ஒருங்கிணைந்து என்ன உள்ளதோ புதிய கல்வி கொள்கையை அப்படியே அமல்படுத்த வேண்டும்

*புதிய கல்விக்கொள்கை குறித்து பல கேள்விகள் எழும்

*வெற்றிகரமாக அமல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே