எனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை : நடிகர் ரஜினிகாந்த்

பேர் கிரில்ஸுடன் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பிடிப்பில் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், வனப்பகுதியில் முட்கள் அதிகமாக இருந்ததாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும்.

இந்த நிகழ்ச்சியின் நாயகன் பேர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்து மக்களுக்கு கற்றுத் தருவார்.

இதில் அவ்வப்போது பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம். இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவதற்காக காலையில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதிக்கு சென்றார்.

அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்ட போது ரஜினிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

கணுக்கால் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு உடனடியாக சென்னை திரும்புகிறார் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் மைசூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த் தனக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே