வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது – வானிலை ஆய்வு மையம்..!!

மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவடைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

விசாகப்பட்டினத்திற்கு தெற்கு- தென்கிழக்கே 250 கி.மீ, காக்கி நாடா(ஆந்திரா)வுக்கு கிழக்கு- தென்கிழக்கே 290 கி.மீ மற்றும் நர்சாபூர்(ஆந்திரா)க்கு கிழக்கு தென்கிழக்கே 330 கி.மீ-லும் மையம் கொண்டுள்ளது

மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா- ஆந்திரப் பிரதேசம்- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடல் மிகவும் கொந்தளிப்போடு காணப்படும்

மேற்கு மத்திய வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. 

இன்று காலை 11.30 மணி அளவில், இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, விசாகப்பட்டினத்திற்கு தெற்கு- தென்கிழக்கே 250 கி.மீ-லும், காக்கி நாடா (ஆந்திரப் பிரதேசம்) வுக்கு கிழக்கு- தென்கிழக்கே 290 கி.மீ-லும் மற்றும் நர்சாபூர்(ஆந்திரப் பிரதேசம்)க்கு கிழக்கு தென்கிழக்கே 330 கி.மீ-லும் மையம் கொண்டுள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வட ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபூர் மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே நிலையாக கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வரையில் காற்று வீசக்கூடும்.

மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா- ஆந்திரப் பிரதேசம்- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை வரையும், மன்னார் வளைகுடாவில் இன்று நாளையும் கடல் மிகவும் கொந்தளிப்போடு காணப்படும்.

எனவே மீனவர்கள் இந்த கடற்பகுதிகளில் நாளை மாலை வரை செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே