தமிழகத்தில் பரவலாக சில மாவட்டங்களில் லேசான மழை பெய்தது.

சென்னை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மேகமூட்டம் ஏற்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தெ.மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடல் பகுதியில் சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 22-ந்தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் சென்னை நுங்கம்பாக்கம், திநகர் , கோடம்பாக்கம் பகுதிகளில் மழை பெய்தது.

இன்றும் காலையில் லேசான மழை பெய்தது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் சாரல் மழை பெய்தது. 

மதுரை , ராமநாதபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்தது.

தென்காசி மாவட்டம் மற்றும் இதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் குற்றாலத்தில் நீர் பெருக்கு அதிகரித்துள்ளதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே