தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

முண்டியம்பாக்கம் 15 செ.மீ மழையும், காமாட்சிபுரம் 11 செ.மீ மழையும், நிலக்கோட்டை 10 செ.மீ மழையும், பாடாலூர், நீடாமங்கலம் தலா 8 செ.மீ மழையும், திருச்சுழி, தானவாடி, கொள்ளிடம் தலா 7 செ.மீ மழையும், விழுப்புரம் 6 செ.மீ மழையும், அரவக்குறிச்சி, வேடசந்தூர், மூலநூர், சாத்தூர் தலா 5 செ.மீ மழையும் பெய்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே