நோக்கியாவின் 43இன்ச் புதிய 4K ஸ்மார்ட் டிவி! சிறப்பம்சங்கள் என்ன?

நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் 2GHz CA53 குவாட் கோர் ப்ராசஸர் கொண்டு இயங்குகிறது. இது 2.25 ஜிபி ரேம் மற்றும் மாலி 450 குவாட் கோர் ஜி.பீ.யுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை 16 ஜிபி உள்ளது.

இந்த மாடலில் நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் பிரைம் வீடியோ போன்ற செயலிகளைப் பயன்படுத்த முடியும். 43 இன்ச் மாடலில் புளூடூத் 5.0 சப்போர்ட் உடன் இந்த செயலிகள் உள்ளன. மேலும் இதில் கூகுளின் ப்ளேஸ்டோரும் உள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவியில் 24W அவுட்புட் வழங்கும் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன, மேலும் ஜேபிஎல் ஆடியோ, டால்பி விஷன் சப்போர்ட் ஆகியவை உள்ளன.

Nokia Smart TV 43 Inch 2

இதன் விலை மற்றும் ஆஃபர்கள்

அறிமுகச் சலுகையாக இந்த மாடலுக்கு பல்வேறு ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ. 31,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்டில் வாங்கும் போது ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக்கும், ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும், சிட்டி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மீது ரூ.1,500 தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது. மேலும் இந்த டிவியை நோ காஸ்ட் இஎம்ஐ செலுத்தியும் வாங்கலாம்.

நோ காஸ்ட் இஎம்ஐ ஆனது மாதத்திற்கு ரூ.2,667 இல் இருந்து தொடங்குகிறது. அதேபோல் பிளிப்கார்ட் ஆறு மாத இலவச யூடியூப் பிரீமியம் சலுகையையும் வழங்குகிறது.

Related Tags :

nokia 43 inch tv| Nokia

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே