முதல் பாதி சுத்தமா போச்சு, இரண்டாம் பாதியாவது தேறுமா? கவின் புலம்பல்

நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு இன்னும் ஒரு படம் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது சோகமான நிகழ்வு ஆகும் அவருக்கு மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எந்த போட்டியாளர்கள்களுக்கும் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி தனது வழக்கமான ஜோக்குகளை தெரிவித்துக் கொண்டிருக்கும் கவின் தற்போது ஒரு சீரியசான பதிவை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் ’இந்த 2020 ஆம் ஆண்டு ஆண்டின் முதல் பாதி சோகமாக முடிந்துவிட்டது என்றும் அடுத்த பாதியாவது சந்தோசமாய் இருக்குமா என்றும் புலம்பலுடன் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

கவின் சொன்னது போல் உண்மையிலேயே இந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சோகமானதாக அமைந்துவிட்டது. அடுத்த பாதியாவது சோகத்திலிருந்து மீளும் வகையில் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Related Tags :

BigbossKavin| Bigboss

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே