குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பதிவுகளை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.

முதலில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 11 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட நாளான ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு நடப்பு ஆண்டில் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மும்கொம்பில் புதிய அணைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே