தனது சர்ச்சை கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட வரதராஜன்.!

டிவி நடிகர் வரதராஜன் பேசிய ஒரு வீடியோ அண்மையில் மிகவும் வைரலானது. அதில் பேசிய வரதராஜன், ‘ தனது நண்பர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கபட்டிருந்தார். அவருக்கு எந்த மருத்துவமனையிலும் அனுமதி கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளானோம்.

இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து அந்த வீடியோ குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடுமையாக விமர்சித்தார். மேலும், தவறான தகவல் பரப்பியதாக வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் கடுமையான விமர்சனத்தினை அடுத்து புதிய வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வரதராஜன், அதில், பேசுகையில், ‘ தன்னுடைய நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என பதிவிட்டுருந்தேன். அதில், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. விரைவில்  அவர் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மேலும், அந்த வீடியோவை முதலில் எனது நண்பர்கள் இருக்கும் குரூப்பில் மட்டுமே தனிப்பட்ட முறையில் பதிவிட்டுருந்தேன். அதன் பின்னர் பகிரப்பட்டு, அந்த வீடியோ வைரலாகிவிட்டது. இவ்வாறு டிவி நடிகர் வரதராஜன் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ மூலம் தனது முதல் விடியோவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Tags :

Varadharajan| coronavirus

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே