சிறு, குறு நிறுவனங்களுக்கான மின்சார உச்சவரம்பு 150 கிலோ வாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்களுக்கான மின்சார உச்சவரம்பு 112 கிலோவாட்டில் இருந்து 150 கிலோவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் துயர் துடைக்கும் வகையில் விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

தொழில் மற்றும் இதர மின் நுகர்வோர்களின் தாழ்வழுத்த மின் இணைப்பை 150 கிலோ வாட் வரை பெற்றுக்கொள்ளலாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கமளித்துள்ளது.