சென்னை வருபவர்களுக்கு இனி கட்டாய தனிமைப்படுத்தல் இல்லை – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கொரோனாவை தடுக்க சென்னை பெருநகர மாநகராட்சி மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் மற்றும் புதிய யுத்திகள் குறித்து தெரிவித்தார்.

அத்துடன், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 

பொது இடங்கில் எச்சில் துப்புதல், குப்பை கொட்டினால் தலா 500 ரூபாய் அபதாரம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

ஆனால், தற்போது இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு இருப்பதால் மாவட்டங் களுக்கு இடையே பயணிப்பவர்கள் கொரோனா அறிகுறி கொண்டிருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப் பட்டனர்.

ஆனால், தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு தனிமைப் படுத்துதல் மற்றும் பரிசோதனை எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது. 

வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மட்டுமே தனிமை படுத்தப்படுவார்கள்.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பாதிப்புகள் குறைந்து விட்டது என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்.

சமூக இடைவெளி கடைபிடிப்பு மற்றும் முக கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்.

தேவை இல்லாமல் பயணம் மேற்கொள்வதை விடுத்து மூன்று மாதங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே