மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பு குறையாதை அடுத்து பின்னர் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ஊரடங்கு வரும் 7 -ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை உறுதிசெய்ய முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு டாஸமாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.