மாநிலங்கள் மீது எந்த ஒரு மொழியும் திணிக்கப்படாது : மத்திய அமைச்சர்

கடந்த புதன்கிழமை புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததிலிருந்து பல்வேறு தரப்பிலிருந்தும் புதிய கல்விக் கொள்கை குறித்து அதிக பாராட்டுகளும் சில விமர்சங்களும் முன் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த விமர்சங்களில் ஒன்றாக , தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் முயற்சியாக, மும்மொழிக் கொள்கை இந்த புதிய கல்விக் கொள்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பே, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அப்போது எந்த ஒரு மொழியையும் மாநிலங்களின் மீது மத்திய அரசு திணிக்காது என உறுதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை குறித்த பிரதமர் மோடி பேசிய உரையின் தமிழாக்கத்தை பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் வெளியிட்டிருந்த நிலையில் , இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், “பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.

மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே