தேசிய கண்தானம் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி தன்னுடைய கண் தானம் செய்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் தேதி இந்தியாவில் தேசிய கண் தான தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் தேசிய கண் தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எனவே நாளை தேசிய கண் தான தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் தேசிய கண்தானம் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி தன்னுடைய கண்களை தானம் செய்துள்ளார்.

கண் தானம் செய்ய ஒப்புதல் அளித்து கண் தான படிவத்தில் கையெழுத்திட்டார் முதலமைச்சர்.

கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே