நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு..!!

கடந்த 18 ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில் முதல் மூன்று நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது.

அதன்பின் கடந்த 21 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என சிறப்பு பிரிவின் கீழ் வருபவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நாளை(24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 2020-2021 வரும்( 30.11.2020) திங்கட்கிழமை அன்று நடைபெறும் வகையில் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த விரிவான அறிக்கை மருத்துவக்கல்வி தேர்வு குழு இணையதளத்தில் வெளியிப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்திரவுப்படி நாளை 24.11.2020 கலந்தாய்வுக்கு ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு சுகாதார துறை மூலம் தக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே