தென் மேற்கு அரபிக்கடலில் உருவாக்கியுள்ள Nisarga புயல் நாளை மகாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியதை அடுத்து தென் மேற்கு அரபிக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது.

இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கோவாவுக்கு 280 கி.மீ தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 490 கி.மீ தொலைவிலும், குஜராத்தில் இருந்து 710 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இன்று பிற்பகலுக்கு மேல் தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்- டாமன் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயலுக்கு ‘Nisarga‘ என பெயர்:

இந்த Nisarga புயல் காரணமாக, மேற்கு இந்திய பகுதிகள், குறிப்பாக மகாராஷ்டிராவின் மும்பை, பால்கர், தானே, ராய்காட், கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும்; அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இதனை தொடர்ந்து, இன்று பிற்பகலுக்கு பிறகு கிழக்கு-மத்திய அரபிக்கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த புயல் 1 அல்லது 2 ஆம் நிலை புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2 ஆவது நிலை என்றால் புயல் கரையை கடக்கும் போது 80-105 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

முன்னதாக கடந்த வாரம் மேற்கு வங்கத்தை தாக்கிய Amphan புயல் சூப்பர் புயல் அதாவது, 5 ஆம் நிலை புயலாக வகைப்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த புயல் கரையை கடக்கும் போது வலுவிழந்து 4 நிலை புயலாக மாறியதால் காற்றின் வேகம் 180 கிலோ மீட்டர் ஆக இருந்தது.

முன்னெச்சரிக்கை நடடிவக்கை:

Nisarga புயலை எதிர்கொள்ள தேவையான பாதுபகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்படுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்களும், மகாராஷ்டிர மாநிலத்தில் 10 குழுக்களும் தயாராக உள்ளன.

கன மழை பெய்யும் என்பதால் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறுப்படுத்துமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மும்பையை தாக்கும் ‘Nisarga‘:

ஏற்கனவே கொரோனா தொற்றால் நிலைகுலைந்துள்ள மும்பை பகுதியில் நாளை புயல் கரையை கடக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

புயல் கரையைக்கடக்கும் பகுதி இன்னும் உறுதி செய்யப்படாததால் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் மகாரஷ்டிராவின் தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1882 ஆம் ஆண்டுக்குப் பிறகு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை தாக்கும் புயல் Nisarga என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே