இந்தியாவில் ஒரே நாளில் 90,632 பேருக்கு கொரோனா தொற்று – மத்திய சுகாதார அமைச்சகம்

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 27,062,744 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 883,740 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

அதேப்போல், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 90,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார், 1065 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி 70 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை இந்தியாவில் 41,13,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலியானோர் எண்ணிக்கை 70,679 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய கணக்குப்படி, கடந்த நான்கு நாட்களாக உயிரிழப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது. உயிரிழப்பு 1.89% ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளையில், கடந்த இரண்டு வாரங்களில் 10 லட்சம் பேருக்குப் பாதிப்க்கப்பட்டுள்ளனர்.

அதே கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 76.53% பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

மோடி அரசு ஊரடங்கு தளர்வுகளில் செலுத்திய கவனத்தைக் கொரோனா கட்டுப்படுத்துவதில் செலுத்த வில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே