காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் வழக்கில் என்.ஐ.ஏ. 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல்

புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கில் காஷ்மீர் நீதிமன்றத்தில் 13,500 பக்க குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ., தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காஷ்மீரில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பஸ்சின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்‍குதலில், 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இந்தத் தாக்‍குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.,) விசாரணை நடத்தி வருகிறது.

தாக்‍குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த அப்துல் ரஷீத் காசி என்ற கம்ரான் மற்றும் ஹிலால் அகமது ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இதில், ஹிலால் அகமது தாக்‍குதலின்போது சுட்டுக்‍கொல்லப்பட்டான். 

இந்த நிலையில் காஷ்மீர் நீதிமன்றத்தில் 13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, இன்று தேசிய புலனாய்வு அமைப்பு தாக்‍கல் செய்தது.

இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தலைவர் மசூத் அசார், அவரது சகோதரர்கள் உட்பட பல பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே