புதுவகை கொரோனா தொற்று இதுவரை இந்தியாவில் கண்டறியப்படவில்லை – வி.கே.பால் தகவல்..!!

பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) மருத்துவர் வி.கே பால் தகவல் தெரிவித்துள்ளார்.

உருமாற்றம் அடைந்த வைரஸால் நோய் பரவலோ, இறப்பு எண்ணிக்கையோ அதிகரிக்கவில்லை எனவும் கூறினார்.

இங்கிலாந்தில் பரவிய புதிய வைரஸ் இதுவரை இந்தியாவில் பரவவில்லை என வி.கே பால் தகவல் தெரிவித்தார்.

இன்று காலை டெல்லிக்கு வந்த அனைத்து 199 பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகளும் பரிசோதனையில் நெகடீவ் வந்துள்ளது என கூறினார்.

வேகமாகப் பரவும் இந்த புதுவகை வைரஸ் திரிபு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை அவசரமாக ஞாயிற்றுக்கிழமை தனது கூட்டு கண்காணிப்பு குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது.

இந்த உலகத் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே புதிய வகை திரிபுகளை சிறப்பு வல்லுநர்கள் கண்காணித்தே வருகிறார்கள் என கூறினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே