வேளாண் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து விவசாயிகளின் போராட்டம் அந்தந்த மாநிலங்களில் துவங்கி, இந்திய தலைநகரம் வரை பரவியுள்ளது.

மேலும், எத்தனை வருடங்கள் ஆனாலும் வேளாண் சட்டத்தை திரும்ப பெரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டும் எதிர்க்கட்சிகள் தங்களின் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். 

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசின் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் வேதனையளிப்பதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் வேதனையளிக்கிறது.

நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளைத் தொடர்ந்து இப்படி கொட்டுகிற பனியிலும், மோசமான தட்பவெப்பத்திலும் போராட வைப்பது சரியானதல்ல.

மத்திய அரசு இப்பிரச்னையைச் சுமூகமாக பேசி தீர்ப்பதற்கு முன்னுரிமை அளித்து, விவசாயப் பெருமக்களின் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே