சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வருகிற ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவார் என்று பெங்களூர் சிறைத்துறை தகவல் அளித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டடார்.

இந்நிலையில், சசிகலாவின் தண்டனை காலம் முடிய இன்னும் சுமார் 8 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவர் முன்னதாகவே சிறையில் இருந்து வெளியே வருகிறார் என தகவல் பரவி வருகிறது.

எனினும் இதுவரை சிறைத்துறை நிர்வாகம் அவரது விடுதலை குறித்து எதுவும் கூறவில்லை.

ஆனால் இப்போது, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலையாவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விக்கு சிறைத்துறை நிர்வாகம் இவ்வாறு பதிலளித்துள்ளது.

மேலும் அபாரதத்தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாத பட்சத்தில் அவர் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி விடுதலையாவர் எனவும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில் பரோல் விதியை பயன்படுத்தினால் சசிகலா விடுதலை தேதி மாறுபடவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் இம்மாதமே விடுதலை செய்யப்படுவார் என தகவல் பரவிய நிலையில் இப்போது அந்த தேதி மீண்டும் தள்ளிப்போயியுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே