குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு உரிமை உண்டு – மத்திய அரசு

குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக யோசனை தெரிவிப்பவர்கள், யோசனையை சொல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

வாரங்கள் கடந்தும் நாட்டில் இன்னும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் ஓயவில்லை. நாள்தோறும் ஏதேனும் ஒரு பகுதியில் மாணவர்களோ அல்லது அரசியல் அமைப்பினரோ போராடி வருகின்றனர்.

டெல்லியில் மாணவர்கள் வித்தியாசமான டெக்னிக்குகளை பயன்படுத்தி, போலிசாரின் லத்தி அடியில் இருந்து தப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

அனைவரின் ஆலோசனைக்கு பிறகே குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்ற அவைகளில் விவாதங்கள் நடைபெற்றன. கருத்துகள் முன் வைக்கப்பட்டன. நீதிமன்றம் செல்லவும், எதிர்க்கருத்துகளை தெரிவிக்கவும் உரிமைகள் உண்டு.

இதுதொடர்பான பரிந்துரைகளை தருவோர் மத்திய அரசுக்கு தரலாம். சட்டத்தை அமல்படுத்துவது அரசின் கைகளில் இருக்கிறது. விரைவில் அனைத்தையும் இறுதி செய்வோம்.

மேலும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்லவோ, போரட்டம் நடத்தவோ மக்களுக்கு உரிமை உள்ளது என்றும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே