ஜெயலலிதா பிறந்தநாளில் “தலைவி” படத்தின் நியூலுக்…

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வரும் தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்தை குறிப்பிடும் வகையில், ஜெயலலிதாக பாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் அவரைப் போலவே அதிமுக பார்டருடன் கூடிய வெள்ளை சேலை அணிந்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே சசிகலா கதாபாத்திரத்தில், நடிகை பிரியாமணிக்கு பதிலாக நடிகை பூர்ணா நடிக்க இருப்பதாக தலைவி பட இயக்குநர் ஏ.எல் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் ரோஜா பட நாயகி மது, ஜானகி ராமச்சந்திரன் பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.

அவர்களிருவரும் வரும் காட்சிகளின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே