அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அமெரிக்க தூதரகத்தில் தொழில் அதிபர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் தொழில்அதிபர்கள் கவுதம் அதானி, டாடா குழும தலைவர், சந்திரசேகரன், ஆனந்த் மஹிந்திரா, முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா, லட்சுமி மிட்டல், அனில் அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் இந்திய தொழில்துறையினருடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துரையாடினார்.

அப்போது அமெரிக்காவில் முதலீடு செய்ய வருமாறு இந்திய தொழில்துறையினருக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

  • இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. 
  • இந்தியா அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவது எங்களுக்கு பெருமை.
  • அமெரிக்காவில் இந்தியர்கள் தொழில் தொடங்குவதற்கான நடைமுறையை எளிமையாக்கி காலத்தை குறைத்துள்ளேன்.
  • தொழில் முனைவோரும் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • எல்லாவற்றுக்கும் அரசையே தொழில்துறை எதிர்பார்க்கக் கூடாது.
  • வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் தொழில்துறையினர் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.
  • அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே நோக்கம்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் பேசினேன்.

கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக அறிகிறேன்.

சுகாதாரத் துறையில் தமது அரசு நிறைவேற்றியுள்ள திட்டம் மகத்தானது.

அமெரிக்க அதிபராக நான் மீண்டும் வெற்றி பெறுவேன்.

நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் பங்குச் சந்தை வளர்ச்சி அடையும்.நான் தோற்றால் பங்குச் சந்தை சரியும்.

அமெரிக்காவிற்கு நான் செய்துள்ள சேவை என்னை மீண்டும் வெற்றி பெற வைக்கும் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே