புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க, மாநில ஆளுநர்களின் மாநாடு தொடங்கியுள்ளது.

2020 புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மாநில ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது காணொளி மூலம் இந்த மாநாடு தொடங்கியுள்ளது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றுள்ளார் .

மாநாடு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

அவரது உரையில், கல்வி கொள்கையில் அரசின் பங்களிப்பு மிக முக்கியமானது. 

கல்வி கொள்கையில் பங்கெடுத்துள்ள ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர்.

கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்வி முறையில் பங்குண்டு என்று தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே