பெகாஸஸ் மென்பொருள் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஒ என்ற நிறுவனம் தயாரித்த பெகாஸஸ் என்ற மென்பொருள் மூலம் உலக தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இப்பிரச்னையை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கையிலெடுத்த எதிர்க்கட்சியினர், பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென கூறி தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.