NEFT மூலம் பணப்பரிவர்த்தனை இனி 24×7 நேரமும் செய்யலாம் – ஆர்பிஐ

NEFT என்னும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சேவை இனிமே 24×7 நேரமும் செயல்படும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வருகிற டிசம்பர் 16-ம் தேதி முதல் NEFT மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

இதற்கு முன்னதாக காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரையிலேயே NEFT பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

அதுவும் திங்கள் முதல் சனிக்கிழமை வரையில் மட்டுமே முடியும்.

குறிப்பாக வங்கி விடுமுறைகள், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.

ஆனால் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின் அடிப்படையில் ஒரு நாளில் 24 மணி நேரமும் பணப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

விடுமுறை எதுவும் கிடையாது. அனைத்து நாட்களிலும் NEFT மூலம் பணப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே