சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல – ராகவா லாரன்ஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அதில் பேசிய லாரன்ஸ், எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் என்னை சீண்டி அரசியல் கத்துக்க வெச்சுடாதீங்க. ரஜினியை யார் தவறாக பேசினாலும் நான் அதற்கு பதில் சொல்வேன் என்றார்.

தொடர்ந்த அவர், முரசொலியில் ரஜினியைப்பற்றி தவறாக எழுதினார்கள். பின்னர் வருத்தம் தெரிவித்தனர். அதற்கு மு.க.ஸ்டாலின் பயந்து விட்டார் என்று அர்த்தமல்ல.

அது ரஜினி அவர்கள் மீதுள்ள மரியாதை என்று தெரிவித்தார்.

மேலும், நான் இந்த மேடையில் இப்படி பேசினத்துக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை. ஆனால் சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே