நீட், ஜே.இ.இ. தேர்வு நடத்தப்பட வேண்டுமென மாணவர்கள் விரும்புகின்றனர் – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

ஜேஇஇ தேர்வுக்கு ஏழரை லட்சம் பேரும், நீட் தேர்வுக்குப் பத்து லட்சத்துக்கு மேற்பட்டோரும் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்தது மாணவர்கள் தேர்வெழுத விரும்புவதைக் காட்டுவதாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 24 மணி நேரத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்தோர் எண்ணிக்கை குறித்துத் தேசியத் தேர்வு முகமைத் தலைமை இயக்குநர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.

தேர்வெழுத மாணவர்கள் விரும்புவதையே இது காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு அவர்களின் விருப்பப்படி தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே