இந்த ஒரு காரணத்தினால் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை..? நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் பதில்சொன்ன நடிகை நீலிமா..!

தமிழ் திரையுலகில் தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் நீலிமா. இப்போது சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டையும் கலக்கி வருகிறார். தமிழில் 50 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ள இவர், 30க்கும் அதிகமான படங்களில் சிறு,சிறு ரோல் செய்திருக்கிறார்.

நான் மகான் அல்ல படத்தில் நடித்ததற்கு நீலிமாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது. இவர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்யும்போது இருபது வயதே ஆகியிருந்தது.

இந்த தம்பதிக்கு இசை என்ற பெயரில் இரண்டு வயது குழந்தை உள்ளது. அண்மையில் ஒரு நேர்காணலில் நீலிமாவிடம் நீங்கள் ஏன் ஹீரோயினாக நடிக்கவில்லை என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் என்னசொன்னார் தெரியுமா?

‘எனக்கு அது அமையவில்லை. மேலும், நான் ஹீரோயின் ஆவதை வாழ்க்கை லட்சியமாகக் கொண்டவள் அல்ல. அப்படி கொண்டு இருந்தால் 21 வயதிலேயே கல்யாணம் செய்திருக்கமாட்டேன்.’என்று சொல்லியிருக்கிறார்.

Related Tags :

Neelima Rani| Seriel Actress

Sri Mahat

ENJOY EVERY MOMENT..

Sri Mahat has 140 posts and counting. See all posts by Sri Mahat

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே