வெளியானது காமன் டிபி.. டிரெண்டாகும் #ThalaAJITHBdayGalaCDP

தல அஜித் கோரிக்கை விடுத்தும் ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலையை கட்டுப்படுத்த முடியவில்லை.

#ThalaAJITHBdayGalaCDP பல லட்சம் ட்வீட்களை கடந்து இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் அஜித்தின் பிறந்தநாள் வரும் மே 1ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், பிரபலங்கள் அஜித்தின் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டுள்ளனர்.

பிரபலங்கள் அருண்விஜய், சாந்தனு, ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்ட பலர், தல அஜித்தின் வேண்டுகோளை ஏற்று, காமன் டிபியை இன்று வெளியிடப் போவதில்லை என அறிவித்திருந்தனர். 

இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த், ராகுல் தேவ், வெயிட் லிஃப்ட் சாம்பியன் சதிஷ் சிவலிங்கம் உள்ளிட்ட பிரபலங்கள் காமன் டிபியை வெளியிட்டுள்ளனர்.

பேக்ரவுண்டில் சூரியன், பைக் ரேஸ், பில்லா என பல படங்களின் சில் அவுட் படங்களுக்கு நடுவே, செம ஹேண்ட்ஸம் ஆன தல அஜித் கூலர்ஸ் போட்டுக்குட்டு செம ஸ்டைலாக இருக்கிறார்.

அவரை சுற்றி லட்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டமும் சில ட்ரோன்கள் பறக்கும் படியான டிசைன் செய்து இருக்கின்றனர்.

கொரோனா பாதிப்புக்காக சமீபத்தில் 1.25 கோடி ரூபாயை நடிகர் அஜித் கொடுத்திருந்தார். தமிழகத்தின் தலைமகன் என்றும் உண்மையான சிட்டிசன் என்றும் ரசிகர்கள் பாராட்டி அஜித் பிறந்த நாள் காமன் டிபியுடன் சேர்த்து கவர் போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

வீரம் மற்றும் சிட்டிசன் படத்தில் வரும் அஜித் லுக் இதில் இடம்பெற்றிருக்கிறது.

கோலிவுட்டின் டிரெண்ட் செட்டர், ரெக்கார்டு பிரேக்கர், சோஷியம் மீடியா எம்பரர் என தல அஜித்தை அவரது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் ட்வீட்களை தாண்டி தெறிக்க விட்டு வருகின்றனர்.

எந்தளவுக்கு ட்விட்டரில் இந்தரெக்கார்டு செய்ய போகின்றனர் என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.

தல அஜித்தின் காமன் டிபியில் பைக் ரேசர், ஃபார்முலா ஒன் ரேசர், மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை நினைவு படுத்தும் வகையில் உழைப்பாளர் சிலை, தமிழ்நாட்டின் பெருமையான திருவள்ளுவர் சிலை, தக்‌ஷா எனும் அஜித் டீமின் ட்ரோன், எல்லா மதங்களையும் மதிப்பவர், அஜித்தின் கூலர்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கியது உள்ளிட்ட பல விஷயங்கள் அடக்கியிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே