தனுஷ், விஜய்சேதுபதி படித்த பள்ளியின் தாளாளர் ‘முதல் மரியாதை’ பட நடிகரா?

67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ’அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்த தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், ‘சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது என்பது தெரிந்ததே. மேலும் மொத்தம் ஏழு விருதுகள் தமிழ் திரைப்படங்களுக்கு கிடைத்தது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரையும் பள்ளி ஒன்றின் தாளாளர் வாழ்த்தியுள்ளார். இதிலிருந்து தனுஷ், விஜய்சேதுபதி ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் படித்து உள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி அந்த பள்ளியின் தாளாளர் சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘முதல் மரியாதை’ படத்தில் நடித்த நடிகர் திலீபன் என்பதும் தெரிய வந்துள்ளது. இவரது நடிப்பில் சமீபத்தில் C/o காதல் என்ற திரைப்படம் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திலீபன் கூறியபோது, ‘எங்களுடைய பள்ளியில் தனுஷ் மற்றும் விஜய்சேதுபதி படித்து உள்ளார்கள் என்றும் அவர்கள் இருவருக்கும் ஒரே ஆண்டில் தேசிய விருதுகள் கிடைத்தது எங்கள் பள்ளிக்கு மிகவும் பெருமைக்குரிய ஒன்று என்றும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்து உள்ளார்கள் என்றும் அது மட்டுமின்றி இந்த பள்ளியின் தாளாளர் ஒரு நடிகர் என்பதும் தற்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே