“நீங்கள் நினைப்பது நடைபெறும்” – மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேச்சு..!!

நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தில் அதிருப்தியில் உள்ள பழைய நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய கட்சி தொடங்கிய விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த, அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நீக்கிவிட்டு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு புதிய நிர்வாகிகளை நடிகர் விஜய் நியமித்தார்.

இந்நிலையில் நாமக்கல்லில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சதீஷ் என்ற நிர்வாகி தலைமையில் 200 பேர் மாற்றுக் கட்சியில் இணைந்தனர்.

இதைப்போல் சேலத்திலும் 200க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்தத் தகவலை அறிந்த நடிகர் விஜய் அதிருப்தியில் உள்ள பழைய நிர்வாகிகளையும், பழைய ரசிகர்களையும் பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து தன்னுடைய இல்லத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். 

அப்போது நடிகர் விஜய், “யாரும் மாற்று கட்சியில் இணைய வேண்டாம்.

அதிருப்தியில் இருக்க வேண்டாம், நீங்கள் நினைப்பதுபோல் அனைத்தும் விரைவில் நடைபெறும்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இடத்தில் புஸ்ஸி ஆனந்த் செயல்படுவார்” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே